கொச்சி அணியின் ஏல விவகாரத்தில் பரபரப்பாக பேசப் பட்ட இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் ஒரு வழியாக பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல் ஆணையர் லலித் மோடியின் பதவியை பறிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவர் சஷாங் மனோகரும் லலித் மோடியின் செயல்பாடுகளில் அதிருப்தியில் உள்ளதாகவும், இதன் காரணமாக மே மாதம் 2 ம் தேதி அன்று நடைபெற உள்ள கூட்டத்தில் மோடியை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப் படலாம் எனத் தெரிகிறது.
சஷாங் மனோகரின் அதிருப்தி குறித்து லலித் மோடியிடம் கேட்டபோது ''எனக்கும் மனோகருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை ''என்று மோடி தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




