தற்போதைய ஐபிஎல் ஆணையர் லலித் மோடி மேல் எழுந்துள்ள பரவலான குற்றசாட்டுகளை அடுத்து, வரும் ஏப்ரல் 26 அன்று அவர் ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்ளப் படுவார் எனத் தெரிகிறது.
மோடி பதவி விலக மறுத்தால் மே 2 ம் தேதி சிறப்பு பொதுக் குழுவை கூட்டி அவரை பதவியில் இருந்து நீக்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் முடிவு செய்து இருப்பதாகத் தெரிகிறது. அவரது விலகலுக்குப் பின் ஐபிஎல் அமைப்பின் ஆணையராக தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவர் சசாங் மனோகர் தேர்வு செய்யப் படலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




