இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெங்களூருவை வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

E-mail அச்செடுக்க

மும்பையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பெங்களூரு அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம்  ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியுள்ளது.

 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் தவான், டெண்டுல்கர் விரைவாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். டுமினியும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திவாரியும் பொல்லார்டும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

திவாரி 31 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், பொல்லார்ட் 13 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 33 ரன்களும் குவித்தனர். ஸ்டெயின் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 149 ரன்கள் மட்டுமே சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் ரன் குவிக்கத் தவறினர். டைலர்  31 ரன்களும், உத்தப்பா 26 ரன்களும், டிராவிட் 23 ரன்களும் சேர்த்தனர். 3 விக்கெட்கள், ஒரு ரன் அவுட், 13 பந்துகளில் 33 ரன்கள் என வெற்றிக்கு உதவிய பொல்லார்டுக்கு  ஆட்ட நாயகன் விருது வழங்கப் பட்டது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்