சமிபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எய்ஜாப்ஜலாஜோகுல் என்ற எரிமலை வெடித்ததில் உருவான சாம்பல் புகை மேகம் ஐரோப்பா கண்டம் முழுக்க பலபகுதிகளை புகைமண்டலமாக மாற்றிவிட்டதால், இதனால் உலக அளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் அது முந்தைய எரிமலையை விட 10 மடங்கு பெரியது ஆகும். அது வெடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எய்ஜாப்ஜலாஜோகுல் எரிமலைக்கு அருகில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது இன்னுமொரு எரிமலை கட்லா. இது விரைவில் வெடிக்க இருக்கிறது. இது வெடித்து சீறி, எரிமலை குழம்புகளை கக்கினால், அதன் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.
இது எய்ஜாப்ஜலாஜோகுல் எரிமலையை விட 10 மடங்கு பெரியது ஆகும். இது வெடிக்குமானால், இதில் இருந்து வெளிப்படும் புகையும் சாம்பலும் அதிக உயரத்துக்கு கிளம்பும் என்று அஞ்சப்படுகிறது. இதை 500 மீட்டர் கனத்துக்கு பனி மூடி உள்ளது. இது எப்போது வெடிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.
அருகில் அருகில் இருக்கும் இரு எரிமலைகளில் ஒன்று வெடித்தால், அது அடுத்ததையும் வெடிக்க செய்யும். கடந்த காலத்தில் இந்த இரண்டு எரிமலைகளும் ஒரே நேரத்தில் வெடித்தன. கடந்த காலத்தில் மூன்று முறை இந்த இரண்டு எரிமலைகளும் ஒரே நேரத்தில் வெடித்து இருக்கின்றன எனறு ஐஸ்லாந்து பல்கலைக்கழக புவி இயற்பியல் துறை பேராசிரியர் பால் எய்னார்சன் தெரிவித்தார்.
கட்லா எரிமலை 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிப்பது வழக்கம். இது கடந்த முறை வெடித்தது 1918-ம் ஆண்டு ஆகும்.எனவே கட்லா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பதால் அநத பகுதியில் வசிப்பவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அவர்கள் அந்த பகுதியை காலி செய்து விட்டு வெளியேற இருக்கிறார்கள்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|