கொச்சி அணி ஏல விவகாரத்தில் சசி தரூர் - லலித் மோடி மோதலை அடுத்து சசி தரூர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். லலித் மோடியும் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிதாக வேறு ஒரு பூகம்பம் கிளம்பி வருகிறது. அது தான் கொச்சி அணி ஏல தொடர்பான சில தகவல்களை மத்திய விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சசி தரூருக்கு கொடுத்து கொடுத்து உதவினார் என்பதே. பிரபுல் படேல் மகள் பூர்ணா ஐபிஎல் அமைப்பில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். பூர்ணாவுக்கு ஐபிஎல் சி.இ.ஒ சுந்தர் ராமன் அனுப்பிய மின் அஞ்சலை பூர்ணா தன் தந்தையின் தனி செயலருக்கு அனுப்பியுள்ளார்.
பிரபுல் படேலின் தனி செயலர் பரத்வாஜ் அதை தன் ஐடி யில் இருந்து, மார்ச் 19 அன்று சசி தரூரின் ஐடி க்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு இரு நாள் கழித்தே டெண்டர் பிரிக்கப் பட்டு சஹாரா அற்றும் ரெண்டேவாஸ் நிறுவனங்கள் வெற்றி பெற்றன.
இந்த குற்றசாட்டு குறித்து தெரிவித்த பிரபுல் படேல் '' என் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை '' என தெரிவித்தார்.
அது போல தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவாரின் மருமகன் சதானந்த் சுலேவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள மல்டி மீடியா ஸ்க்ரீன் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றசாட்டை சரத்பவாரின் மகள் சுப்ரியா மறுத்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




