இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

உலகின் மிகப் பெரும் வணிக நிறுவனங்களில் 56 இந்திய நிறுவனங்கள்!

E-mail அச்செடுக்க
உலகின் வலிமையான முதல் 2000 வணிக நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட 56 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுளளன.

பிரபல அமெரிக்கப் பத்திரிகையான போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை உலகின் வலிமையான முதல் 2000 நிறுவனங்கள் எவை என்பதை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் விற்று வரவு, இலாபம், சொத்து மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

இந்த ஆய்வுகளின் படி அமெரிக்க வங்கியான ஜே.பி. மார்கன் முதல் இடத்தை வகிக்கிறது. ஜெனரல் எலக்டிரிக்ஸ், பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் எக்ஸன் மொபைல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

இந்தியாவின் மிகப் பெரும் வணிக நிறுவனமான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலக அளவில் 126 ஆவது இடத்தை வகிக்கிறது.

அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 130ஆவது இடத்திலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ONGC) 155ஆவது இடத்திலும் இருக்கின்றன.

ஐசிஐசிஐ வங்கி (282), இந்தியன் ஆயில் (313), என்டிபிசி (341), டாடா ஸ்டீல் (345), பார்தி ஏர்டெல் (471), ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா (502), லார்சன் & டூப்ரோ (548) மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி (632) ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

62 நாடுகளின் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் வழக்கம் போலவே இம்முறையும் அமெரிக்க நிறுவனங்களே (515) அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானிய (210) நிறுவனங்கள் உள்ளன. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளின் நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறுவது கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்து வருகிறது.

சீனாவின் 113 நிறுவனங்களும் இந்தியாவின் 56 நிறுவனங்களும் கனடாவின் 62 நிறுவனங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்