மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை கிங்ஸ் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்த விழ டோனியும் பத்ரிநாத்தும் இணைந்து எடுத்த 52 ரன்கள் அணியின் ரன்களை சற்று அதிகரித்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய டெக்கன் சார்ஜஸ் அணியை சென்னை கிங்ஸின் பந்து வீச்சாளார் போலிங்கர் நிலைகுலையச் செய்தார். 4 ஓவர்கள் வீசிய போலிங்கர் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய டெக்கான் சார்ஜஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக சென்னை நுழைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் முதன் முறையாக நுழைந்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




