இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐபிஎல் - பிசிசிஐக்கு எதிராக ஏ.சி. முத்தையா வழக்கு!

E-mail அச்செடுக்க
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களுக்கு ஐபிஎல் அணிகளின் உரிமை அளிக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி. முத்தையா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஸ்ரீநிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமையன்று வழக்கு தொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் முத்தையா கோரி உள்ளார்.

ஐபிஎல் விவகாரத்தில் லலித் மோடிக்கு ஆதராவக முத்தையா கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

மோடிக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவை சீனிவாசன் கூட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளது முழுக்க முழுக்க சரியே. அவர் கிரிக்கெட் வாரிய செயலாளராகவும் இருக்கிறார். ஒரு அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அவர் எப்படி கூட்டத்தைக் கூட்ட முடியும். கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் அவருக்குக் கிடையவே கிடையாது.

அவரது பதவியே சட்டத்திற்கு புறம்பானதாகும். இவருக்கு வசதியாகத்தான் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தனர். திருத்தத்திற்கு முன்பு இருந்த கிரிக்கெட் வாரிய சட்டத்தின்படி, வாரியத்தின் எந்த ஒரு நிர்வாகியும், வாரியத்தின் வர்த்தக ரீதியிலான அமைப்புகளில் பங்கு பெற முடியாது என்று இருந்தது. இதை சுட்டிக்காட்டித்தான் நான் வழக்கு தொடுத்தேன் என்று முத்தையா கூறியுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்