இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

உலகின் முதல் முழுமையான முக மாற்று அறுவை சிகிச்சை

E-mail அச்செடுக்க
விபத்தில் முகம் முழுதும் சிதைந்து போன இளைஞர் ஒருவரின் முகத்தை சீர் செய்து முப்பது பேர் கொண்ட ஸ்பானிய டாக்டர்கள்  குழு ஒன்று சாதனை புரிந்துள்ளது. இதற்குமுன் முக மாற்று அறுவை சிகிச்சைகள் பல நடந்திருந்தாலும் அவை யாவும் பகுதி அளவேயான அறுவை சிகிச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சாதனை அறுவை சிகிச்சையின் போது அந்த நபருக்கு தோல் திசுக்கள் மட்டுமல்லாது, புதிய கண்ண எலும்புகள், பற்கள், தாடைகள், மேல்தோல், மூக்கு மற்றும் உதடுகள் ஆகியவையும் புதிதாக பொருத்தப்பட்டன. இருபத்திநான்கு மணி நேரம் எடுத்துக்கொண்ட, உலகின் முதல்  முழுமையான முக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த நபர், (பெயர்  வெளியிடப்படாத,  முப்பதுகளில் இருக்கும் ஒரு விவசாயி) இன்னும் இரண்டு மாதங்களாவது மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியதிருக்கும்.

உலகின் முதல் முக அறுவை சிகிச்சை (பகுதி) 2005 ஆம் ஆண்டு ஒரு இசபெல் டி நோயர் என்ற பிரெஞ்சு பெண்மணிக்கு நடைபெற்றது. அதன் பிறகு ஆங்காங்கே பல முறை முக அறுவை சிகிச்சை நடைபெற்றாலும், முழுமையான அளவில் முக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது  உலகில்  இதுவே  முதல் முறை என்று  பார்சிலோனவின்  வால் ஹெப்ரான் பல்கலைக் கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்