இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

17 மாதங்களுக்குப் பின் ஓபராய் மீண்டும் திறப்பு!

E-mail அச்செடுக்க
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஓபராய் ஓட்டல் சனிக் கிழமை (24-04-2010) அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

எளிமையாக நடைபெற்ற மறுதிறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில முதல்வர் அஷோக் சவான் கலந்து கொண்டார்.  ஓபராய் ஓட்டலின் தலைவர் ஓபராய் மற்றும் லியாம் டேம்பர்ட் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

17 மாதமாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்கு 180 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. மறுசீரமைப்புக்கு முன் 287 அறைகள் இருந்ன. தற்போது அறைகளின் எண்ணிக்கை 214ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 73 அறைகள் ஆடம்பர சூட்களாக மாற்றப்பட்டுள்ளன.

22 அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செப்டம்பர் மாத வாக்கில் அறைகள் முன்பதிவு சூடுபிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் லேம்பர்ட் கூறினார்.

மறுசீரமைப்புக்குப் பின் ஓபராய் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அடுக்குகளிலும் 150 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 150 பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக 300 பேர் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள் என்றும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 550 பேர் என்றும் லேம்பர்ட் கூறியுள்ளார்.

ஓபராய் ஓட்டல் அறைகளின் வாடகைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இரவுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் ஆடம்பர சூட்களுக்கு ரூ. 3 இலட்சம் வரையிலும் வாடகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்