மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டெக்கானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் T20 போட்டி தொடருக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் 18 .3 ஓவரில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அனிருத் சிங் 40 ௦ ரன்களும், வேணுகோபால் ராவ் 24 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 .5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. கல்லிஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிட் 35 ரன்களும்,பீட்டர்சன் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




