இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சிராயு அமின் ஐபிஎல் அமைப்பின் இடைக் காலத் தலைவராக நியமனம்!

E-mail அச்செடுக்க

ஐபிஎல் அமைப்பின் தலைவர் லலித் மோடி நேற்று இரவு திடீரென இடைநீக்கம் செய்யப் பட்டதை அடுத்து ஐபிஎல் இடைக் காலத் தலைவராக பரோடா கிரிக்கெட் சங்க தலைவரான சிராயு அமின் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

 

திட்டமிட்ட படி இன்று மும்பையில்  ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் மனோகர், செயலாளர் ஸ்ரீநிவாசன், அருண் ஜெட்லி, ராஜீவ் சுக்லா, நிரஞ்சன் ஷா உட்பட ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இடைநீக்கம் செய்யப் பட்ட மோடியும், மத்திய அமைச்சர் பாரூக் அப்துல்லாவும்  கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சசாங் மனோகர் '' ஐபிஎல் அமைப்பின் இடைக் கால தலைவராக பரோடா கிரிக்கெட் சங்க தலைவரான சிராயு அமின் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்