இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஐபிஎல் தலைவன் நானே; இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளேன்: மோடி!

E-mail அச்செடுக்க
ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவால் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐபிஎல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடி, ஐபிஎல்லின் தலைவன் நான்தான் என்றும் இடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை பின்னிரவில் ஐபிஎல் பகுதி 3ன் கடைசி ஆட்டம் முடிந்தவுடன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த மோடி தற்போது இப்படி கூறியிருக்கிறார்.

லலித் மோடி தன்னுடைய டிவிட்டரில் கூறியிருப்பதாவது:  எனக்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.  ஐபிஎல்லின் தலைவனாக நானே தொடர்கிறேன். தற்போது இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளேன். பொறுத்திருங்கள். நாம் தற்போதுதான் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், ஐபிஎல் பிரச்சனைக்கு காரணமான அனைவரைப் பற்றியும் நான் வெளியில் கூறுவேன் என்று தன்னுடைய டிவிட்டரில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்