கடந்த சனிக்கிழமை(24-04-2010)யுடன் பிரசித்திபெற்ற ஹப்புல் தொலைநோக்கி (Hubble Space Telescope) விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு இருபது வருடங்கள் நிறைவடைகின்றன. வான்வெளியைப் பற்றி அற்புதமான படங்களுடன் தகவல்களை ஹப்புல் அளித்து வந்தாலும், தற்போது விஞ்ஞானிகள் துள்ளிக் குதிப்பது, அது தற்போது பிறந்தநாள் பரிசு போல் அனுப்பி உள்ள அசத்தும் ஓர் புகைப்படத்திற்காக.நாம் நன்கறிந்த கார்னியா எனும் நெபுலா (நமது அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களின் பிறப்பிடம் என்று சொல்லலாம்) கூட்டத்தில் ஒரு சிறு பகுதியில், அருகில் உள்ள நட்சத்திரங்களால் அதிவேகமாக விழுங்கப்படும் மிகப்பெரும் தூசு மற்றும் காற்று கலந்த ஒரு தூண் போன்ற மலையைத் தான் அது புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. என்ன, அந்த தூண் போன்ற வடிவத்தின் உயரம்தான் கொஞ்சம் அதிகம். சுமார் மூன்று ஒளியாண்டுகள். (ஒரு ஒளியாண்டு என்பது, ஒளி ஒரு ஆண்டிற்கு பிரயாணிக்கும் தூரம். ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்).
இது, 1995ஆம் ஆண்டில் இதே ஹப்புலால் எடுக்கப்பட்ட பில்லர்ஸ் ஆப் கிரியேஷன் தொகுப்பில் உள்ளதென்றாலும் இத்தனை அசத்தலாய் இதை ஹப்புல் எடுக்கவில்லை. 1990 ஏப்ரல் 24ஆம் தேதி ஏவப்பட்ட இந்த அற்புதத் தொலை நோக்கி அனுப்பும் அற்புத புகைப்படங்களும், கண்டுபிடிப்புக்களும் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்ருகிறது.
ஹப்புளின் உய்த்துணர முடியாத இயலுமைகள் மனிதன் உருவாக்கிய அறிவியல் கருவிகளிலேயே மிக சக்தி பெற்றவற்றில் ஒன்றாக அதனை ஆக்கியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




