இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

T20 உலகக் கோப்பை - நியூசிலாந்து வெற்றி!

E-mail அச்செடுக்க
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ்  வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 135 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் ரன் எடுக்கத் திணறிய இலங்கை வீரர்கள் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கினர். தொடக்க வீரராகக் களமிறங்கிய ஜெயவர்த்தனே 51 பந்துகளைச் சந்தித்து 81 ரன்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இலங்கை பந்து வீச்சு சவாலாகவே இருந்தது. கடைசி ஓவரில் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நாதன் மெக்குல்லம் ஆறு ரன்கள் எடுத்து நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் ஜெஸ்ஸி ரெய்டர் 42 ரன்கள் எடுத்தார்.

6 பந்துகளில் 16 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த நாதன் மெக்குல்லம் மேன் ஆஃப் தி மேட்சாக தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்