உலகக் கோப்பை T20 போட்டித் தொடரில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணியும் அயர்லாந்து அணியும் மோதிய போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மேற்கு இந்திய தீவுகள் அணி.
முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சமி 30 ரன்களும், சர்வான் 24 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணியின் டாக்ரெல் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி மேற்கு இந்திய தீவுகளை அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் 16.4 ஓவரில் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. அயர்லாந்து அணியின் வில்சன் மட்டும் 17 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சமி மற்றும் ராம்பால் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். 3 விக்கெட்கள் மற்றும் 30 ௦ ரன்கள் குவித்த சமி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




