இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுக நாடான ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது இந்திய அணி. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கான் அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. இந்த அணியைச் சார்ந்த துவக்க ஆட்டக்காரர் நூர் அலியின் சிறப்பான ஆட்டத்தினால் கௌரவமான ஸ்கோர் எடுக்க முடிந்தது. அலி 48 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து அஸ்கர் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியவில்லை. 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை ஆப்கானிஸ்தான் எடுத்தது. இந்திய தரப்பில் நெஹ்ரா 3 விக்கெட்களையும்,பிரவீன் குமார் 2 விக்கெட்களையும், ஜஹீர் கான் மற்றும் ஜடேஜா 1விக்கெட்களையும் வீ்ழ்த்தினர்.
116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி காம்பீரை ஆரம்பத்திலே இழந்தாலும் முரளி விஜயின் பொறுப்பான ஆட்டத்தினால் 14.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றியை பெற்றது. டி20அறிமுக நாயகனான முரளி விஜய் 46 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். தோனி 15 ரன்களும் யுவராஜ் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷை சந்திக்கிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




