T20 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரெய்னா 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் விளாசினார். யுவராஜ் சிங் 37 ரன்களும், தினேஷ் கார்த்திக், கேப்டன் டோனி தலா 16 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 172 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் கல்லிஸ் 54 பந்துகளில் 73 ரன்களும், சுமித் 28 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸ் 15 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் விளாசினார். சதம் அடித்த ரெய்னா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




