இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான ராணுவ நீதிமன்ற விசாரணையை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ராணுவ தளபதியாக இருந்தபோது அதிபர் ராஜபட்சே மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கு விசாரணை செல்லத்தக்கதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்தபிறகே இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும். அதுவரை ராணுவ நீதிமன்ற விசாரணையை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே பொன்சேகா பதவியில் இருந்தபோது ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை ராணுவ நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




