இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் - ஊடக அமைப்புகள் வரவேற்பு

E-mail அச்செடுக்க

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்குப் பொது மன்னிப்பு அளிக்கும் தீர்மானத்தை ஊடக உரிமைகளுக்கான அமைப்புகள் நேற்று செவ்வாய்க்கிழமை வரவேற்றுள்ளன.ஆயினும் அவர் சுதந்திரமாகப் பணிக்குச் செல்வதை உறுதிப்படுத்துமாறு அவை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றன.

சிறுபான்மை தமிழ் மக்களின் நிலைமைபற்றி எழுதியிருந்த கே.எஸ்.திசநாயகம் தனது தொழிலை செய்வதற்கு விடுவிக்கப்பட வேண்டும் என்று பாரிஸைத் தளமாகக் கொண்ட எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

"திசநாயகம் இயல்பு வாழ்வை முன்னெடுப்பதற்கு குறிப்பாக பத்திரிகையாளர் என்ற முறையில் அவர் சுதந்திரமாக தனது பணியை ஆரம்பிப்பதை உறுதிப்படுத்துமாறு எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்துகிறது%27 என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் அவரின் விடுதலை தொடர்பான விதிமுறைகள் குறித்த விபரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தற்போதும் திசநாயகத்தின் சட்டத்தரணிகள் முயன்று வருவதாகவும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புத் தொடர்பாக முன்னறிவிப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை என்றும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கூறியுள்ளது.

"இலங்கையில் எமது சகா தனித்து வாழ்கின்ற நிலையில் அவரின் பாதுகாப்புத் தொடர்பாக நாம் தொடர்ந்தும் கவலையுடனேயே இருக்கிறோம். அதேவேளை பொதுமன்னிப்பு விடயமானது மிகவும் நல்ல செய்தியாகும். விபரங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை எமது ஆவலானது தொடர்ந்து இருக்கும்%27 என்று ஊடகவியலாளரைப் பாதுகாக்கும் குழுவின் ஆசியாவுக்கான நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் பொப் டயற்ஸ் ஏ.எவ்.பி.செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.கடந்த ஜனவரியில் திசநாயகம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவரது கடவுச்சீட்டைக் கையளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டிருந்தது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்