குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வராகப் பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் 9ஆயிரத்து 50 கோடி ரூபாய்கள் தொழில் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அடுத்து வரும் ஆண்டுகளில் எந்தப் பணிக்கு முன்னுரிமை அளிப்பீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்தத ஸ்டாலின், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் மீஞ்சூர் மற்றும் நெமிலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், பரவலான தொழில் வளர்ச்சி, விவசாயத்தில் மலர்ச்சி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஆதி திராவிடர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் சமுதாய மேம்பாடு என்பதுதான் கலைஞர் அரசின் குறிக்கோள் என்றும் அதற்கான பயணம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




