இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரேஷன் கடையில் சிமென்ட்!

E-mail அச்செடுக்க
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் சிமென்ட் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 1000 சதுர அடிக்கும் குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு மூடை ஒன்றுக்கு ரூ. 200 என்ற அளவில் சிமெண்ட் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறிய அளவிலான வீடுகள் கட்டத் திட்டமிட்டிருப்போர் தங்கள் வீட்டின் வரைபடத்திற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று, அதன் நகலையும் தேவையான சிமெண்ட் மூடைகளுக்குத் தக்கவாறு வங்கிக் காசோலையும் எடுத்து, தமிழ்நாடு பொது வழங்கல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 400 சிமென்ட் மூடைகள் வரை மானிய விலையில் வழங்கப்படும். சிமென்ட்டை வாகனத்தில் ஏற்றும் கூலியை ரேஷன் கடையே ஏற்றுக் கொள்ளும். ஆனால் லாரி வாடகையை பயனாளர் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள எண்ணினால் அவர்களுக்கு 50 மூடை சிமென்ட் மானிய விலையில் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்