"வித்தியாசமாக இருப்பது தான் சிறப்பாய் உள்ளது. அதீத சினிமாத்தனம் இல்லாமல், அலங்காரம் இல்லாமலேயே தேவதையாய் தெரிகிறார்" என்று சராமாரியாக பாலிவுட் கதாநாயகி விதயா பாலனை புகழ்ந்து தள்ளியுள்ளார் உலகப்புகழ் பெற்ற ஓவியரும் தற்போது கத்தார் நாட்டு குடியுரிமை வாங்கியுள்ளவருமான எம்.எப்.ஹூசேன்.ஏற்கனவே மாதுரி தீட்சித் நடித்த படத்தை பார்த்து விட்டு அவரை வானளாவ புகழ்ந்து இந்தி திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றெல்லாம் சொல்லி அவரை வைத்து படம் எடுத்தவர் தான் எம்.எப்..ஹூசைன். தற்போது வித்யா நடித்த இஷ்கியா படத்தை பார்த்து விட்டு மிக பொருத்தமான இந்திய பெண் என்று புகழ்ந்துள்ளார்.
இந்தி திரையுலக பத்திரிகை ஒன்றிக்கு அளித்த பேட்டியில் மேலும் எம்.எப்.ஹுசைன் வித்யா நடித்த பரீனீதா, இஷ்கியா, பா படங்களை பார்த்ததாகவும் பிற கதாநாயகிகளை போல் அரை குறை ஆடை அணியாமல் தன் சிந்தனைக்கேற்ப செயல்படுவதாலுமே தன்னை வித்யா கவர்ந்ததாகவும் ஹூசேன் தெரிவித்துள்ளார். அனேகமாக 2011-ல் ஹூசேன் இயக்கவிருக்கும் படத்தில் வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




