இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செம்மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

E-mail அச்செடுக்க
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் அடங்கிய புத்தகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.

கோவையில் ஜூன் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கம், பெது அரங்கம், கண்காட்சி மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பொது அரங்கில் 5 நாள்களும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று (08-06-2010) அன்று வெளியிட்டார். அப்போது தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி, முனைவர் பொற்கோ, முனைவர் அவ்வை நடராசன், தனி அலுவலர் கா. அலாவுதீன் IAS., தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவன் ஜெயதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்