தமிழக சுற்றுலாத் துறையின் கருப் பாடல் ஒன்று இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமையப்பில் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.தமிழக சுற்றுலாத் தலங்களை வெளி மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பிரபலப்படுத்தும் முயற்சியில் தமிழக சுற்றுலாத்துறை ஈடுபட்டுள்ளது. அச்சு விளம்பரம் மட்டுமின்றி காட்சி விளம்பரங்கள் வாயிலாகவும் தமிழக சுற்றுலாத்துறை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் பலனாய் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு அளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இது 24.5 விழுக்காடாக அமைந்தது.
இந்நிலையில் முதன் முறையாக தமிழக சுற்றுலாத்துறைக்கான கருப்பாடல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழ்மனதில் எளிதில் பதியும் வகையிலான இசை, அதோடு தொடர்புடைய காட்சிகள் மனதில் விரியும் வகையிலான காட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இசைமையமைப்பாளர் பரத்வாஜ் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழகம் இந்தியப் பண்பாட்டின் தலைநகரம் என்கிற பொருளில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள், கோயில்கள், வன உயிரினங்கள், கலை வடிவங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்குத் தொட்டுக் காட்டும் வகையில் ஒரு நிமிடம் ஒளிபரப்பாகும் இப்பாடல் காண்பவர்கள் மனதில் தமிழக சுற்றுலாத் தலங்களை முத்திரையாகப் பதிந்துவிட்டுச் செல்லும்.
இந்தப் பாடலை தமிழக சுற்றலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் வெளியிட்டார். இசையமைப்பாளர் பரத்வாஜ், சுற்றுலாத்துறைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுலாத்துறை இயக்குநர் ஆர்.சி. மேகன்தாஸ் ஆகியார் அப்போது உடன் இருந்தனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




