வேலூர் நகராட்சியைக் கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. அதிமுகவின் ஆர்பாட்டத்திற்கு ராஜ்ய சபா முன்னாள் உறுப்பினர் கோகுல இந்திரா தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன.அதிமுக ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக தபால் நிலையம் அருகில் திமுகவினர் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலிஸ் குவிக்கப்பட்டது.
இதனிடையே காவல் துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதில் காவல் அதிகாரி தாக்கப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




