இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெரியார் படைப்புகளை வெளியிட பெ.தி.கவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

E-mail அச்செடுக்க
தந்தை பெரியார் குடியரசு இதழில் எழுதிய கட்டுரைகளை வெளியிட பெரியார் தி.க.வுக்கு எவ்விதத் தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தை பெரியார் 1925 முதல் 1938 வரை குடியரசு இதழில் எழுதிய கட்டுரைகளை வெளியிட பெரியார் திராவிடர் கழகம் உரிமை கோரியது.

அதனை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத்தொடர்ந்து பெரியார் படைப்புகளைப் பயன்படுத்த பெரியார் தி.க.வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியார் திராவிடர் கழகம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பெரியார் கட்டுரைகளை வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்