இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விழுப்புரம் அருகே அரசு பேருந்துகள் சிறைப்பிடிப்பு

E-mail அச்செடுக்க
சாலை வசதிகளை மேம்படுத்தக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். விழுப்புரம் அருகே மரகதபுரத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் அரசு பேருந்துகளை சிறைப் பிடித்தனர்.

பள்ளிக்கூட வாகனமும் சிறைபிடிக்கப்பட்டது. சாலைகளை சீரமைக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வரை வாகனங்களை விடுவிக்கப் போவதில்லை என கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்