இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்படுவாரா?

E-mail அச்செடுக்க
இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என ஒரு பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் உரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார். டக்ளஸ் மீது கொலை, ஆள் கடத்தல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவரை கைது செய்யவேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் டக்ளஸ் மீதான புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதி எலிபி தர்மராவ் அனுமதி வழங்கியிருக்கிறார்.

வெள்ளிக் கிழமையன்று இது குறித்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்படுவாரா அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்க வேண்டும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்