சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய். இக்பால் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நீதிபதி இக்பாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்தப் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கோகலே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி இக்பாலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
1951ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி இக்பால் தன்னுடைய கல்லூரி கல்வியையும் சட்டக் கல்வியையும் ராஞ்சி பல்கலைக் கழத்தில் முடித்தார். 1975ஆம் ஆண்டு முதல் ராஞ்சி நகர நீதிமன்றங்களில் வாதாடிய இவர், பின்னர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் வாதாடினார். 1990ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|