இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும் அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"
மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்? மன மகிழ்வு என்பது என்ன என்பதை எல்லோரும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால் பாலாறும் தேனாறும் ஓடி, நாடு வளம் பெறும்; உலகம் சுபிட்சம் அடையும்; அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும்; உலகில் தீவிரவாதம் குறையும் என்றெல்லாம் அதீத நம்பிக்கைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. குறைந்த பட்சம், அவரவரும் மெய் மகிழ்வுடன் வாழ்க்கையை அணுகலாம்; உய்யலாம்; சமர்த்தாய் வாழப் பழகலாம். அவ்வளவே! மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு, மனம் மகிழும் முயற்சி, இத்தொடர் அவ்வளவே!. அளவளாவிக் கொள்வோம். - நூருத்தீன் |
னதிற்கென்று சில மாதிரிகள், வடிவமைப்பு இருக்கிறதாம். எப்படி? தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வையுங்கள், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மனம் யோசிக்கிறதா என்ன? சரவண பவன் தோசையோ, பீட்ஸாவோ, அதை உண்பதற்குத்தான் ஆவலே தவிர, செரித்து அது ஜீரணம் ஆகியே தீரவேண்டும் என்று மனம் மெனக்கெட்டுத் தீர்மானமெல்லாம் போடுவதில்லை. உறங்கச் செல்லும் போது, ஃபேனோ, ஏசியோ அட்ஜஸ்ட் செய்து படுத்துக் கொண்டால் போதும், மூச்சுவிட எதுவும் திட்டமெல்லாம் தேவையில்லை. கெடு பாக்கியிருந்தால் தானாய் அது நடக்கும். இவையெல்லாம் உள்ளுணர்வு (subconscious). இப்படிப்பட்ட உள்ளுணர்வுதான் நம் வாழ்க்கையின் பலன்களின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது.
நாடக வடிவைமப்பு
சிலருக்கு வாழக்கையில் எதுவுமே சரியாக இருக்காது. எல்லாமே சோக மயம்தான். மார்க்கெட்டில் எதிரில் தென்பட்டிருப்பார் அந்த நண்பர். அன்றைய தினத்தின் உலக மகாக் குற்றத்தைச் செய்து விடுவீர்கள், "அடடே ... பார்த்து ரொம்ப நாளாச்சே, என்ன சௌக்கியமா?"
சரி அதற்கெல்லாம் என்ன செய்வது? பார்க்கத்தானே போகிறோம்!
னமகிழ்வு மாதிரிகள் தொடரும்.
(மனம் மகிழுங்கள் தொடர் முழுவதையும் இங்கு காணலாம்)

எழுதியவர்: Jayalakshmi, June 13, 2010
அவசர உலகில் மறந்து போன மனம் மகிழும் விஷயங்களை ஞாபகப் படுத்தும் என்ற ஆவல் எழுகிறது.
அடுத்த பகுதிகளை எதிர்நோக்கியுள்ளேன்.
| < முந்தையது | அடுத்தது > |
|---|





இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும் அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"