இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தண்டவாளம் தகர்ப்பு:தமிழ் தேசிய இயக்கத்தினர் 10 பேர் கைது

E-mail அச்செடுக்க

விழுப்புரம் அருகே சித்தணி என்ற இடத்தில் நேற்றைய முன்தினம் அதிகாலையில் தொடர்வண்டி பாதையில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தொடர்வண்டி செல்லும் இருப்புப்பாதை சேதமடைந்தது.

 

குண்டு வெடித்த இடத்தில் ராஜபக்சேயின் இந்தியா வருகையை எதிர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் கிடந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து

சந்தேகத்தின் அடிப்படையில் தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மூன்று பேர் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளதால் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட் இது குறித்து கூறுகையில்: இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எந்த விதமான மிரட்டலும் கிடையாது, புலிகளின் ஆதரவாளர்கள் ராஜபக்சேயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த குண்டு வெடிப்பை நடத்தி இருக்கிறார்கள். இதில் மாவோயிஸ்டுகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.


ரெயில் தண்டவாள குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ் தேசிய இயக்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது ஒரு பொய் குற்றச்சாட்டு என்றும் அதன் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கைவிடுத்துள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்