இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு சிறப்பு ரயில்கள்!

E-mail அச்செடுக்க
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை கோலாகலம் பூண்டு வருகிறது. வரும் விருந்தினர்களுக்கு விருந்துபசாரம் செய்ய சிறப்பு உணவுக்கூடங்கள் பிரமாண்ட அளவில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட விருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

21ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவை வந்தடையும்.

22ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவை வந்தடையும்.

22ஆம் தேதி காலை 4.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அன்று மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும்.

மாநாடு முடிந்து 27ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னை சிறப்பு ரயிலும் இரவு 11.55 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு ரயிலும் கோவையில் இருந்து புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு  ஏற்கெனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்