இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தண்டவாளத் தகர்ப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - லத்திகா சரண்

E-mail அச்செடுக்க
ரயில்வே தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிப்படுவார்கள் என தமிழக காவல் துறை தலைவர் திருமதி லத்திகா சரண் கூறியுள்ளார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம்  தகர்க்கப்பட்டடது.சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சதி செயல் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு கியூ பிராஞ் போலீஸ்க்கு மாற்றப்பட்டது.

விசாரணை தீவிரமடைந்துவரும் நிலையில் ரயில்வே தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிப்படுவார்கள் என தமிழக காவல் துறை தலைவர் திருமதி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

சதிகார்கள் மீது எளிதில் தப்பிவிடமுடியாத அளவு கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றசெயல்கள் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஏதுவாக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக வும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்