இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு சதி தன்னை குறிவைத்து நடத்தப்பட்டதல்ல : ப சிதம்பரம்

E-mail அச்செடுக்க
விழுப்புரம் தண்டவாள கவிழ்ப்பு சதி தனக்காக வைக்கப்பட்ட குறியல்ல  என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். முதல்வர் கருணாநிதி அவரது இல்லத்தில்  சந் தித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

ரயில்வே தண்டவாள தகர்ப்புக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் சந்தேகத்துக்கு உரிய நபர்களை விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்ட சிதம்பரம் தண்டவாளத் தகர்ப்பு  ஒரு பயங்கரவாத செயல் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தான் திருச்சி செல்ல திட்டமிட்டிருந்தாலும் ரயிலை சரியான நேரத்தில் பிடிக்க முடியாது என்பதை அறிந்து தனது  ரயில் பயணத்தை ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தன் உயிர் மீது குறிவைக்கப்பட்டதா, இல்லையா என்பது முக்கியமல்ல என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். இது ரயில்வே ஊழியர்களின் சமயோசித அறிவால் நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்