தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை தமிழ் பல்கலைக் கழகப் பதிவாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஒரு மர்ம கடிதம் வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற வாரம் விழுப்புரம் ரயில் தண்டவாளம் தகர்ப்பு சதி சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் வெடிகுண்டு வெடித்ததாகவும் பட்டாசு வெடித்ததாகவும் மாறுபட்ட செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தஞ்சை பல்கலைக் கழகப் பதிவாளருக்கு வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




