விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக காவல் துறையினரால் பிடித்துச் சென்றவர்கள் தொடர்பாக வியாழக் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தமிழக காவல் துறைத் தலைவர் லத்திகா சரண் தெரிவித்தார். குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தமிழக உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட் தெரிவித்தார். விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு தொடர்பாக விழுப்புரம் காவல் சரக உயர் அதிகாரிகளுடன் ஜாபர்சேட் முக்கிய ஆலோசனை நடத்தியபின் இதனை தெரிவித்தார்.
தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமப்புறங்களில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.
இதனிடேயே காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்பது பேரை காணவில்லை என்றும் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்களின் குடும்பத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காணமல் போனவர்கள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனிடேயே அந்த ஒன்பது பெரும் விடுவிக்கப் பட்டதாக அரசு வக்கீல் அறிவித்திருக்கிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




