இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தென் மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

E-mail அச்செடுக்க
காற்றாலை மின் உற்பத்திக்கு பேர் போன நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்சார உற்பத்தி மீண்டும் சீரான அளவில் பெருகி வருவதாக நம்பிக்கைச் செய்திகள் கிடைத்துள்ளன.

கடந்த மாதம் 17ஆம் தேதியே மின் உற்பத்தியின் ஏறுமுகம் குறித்த அறிகுறிகள் தோன்றியதாக காற்றாலைத் தொழில் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக ஒரு நொடிக்கு 1.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் போதுமானது. ஆனால் தற்போது நொடிக்கு 15  மீட்டர் காற்று வீசுவதால் மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் 4500 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி அதிகரிப்பைத் தொடர்ந்து மின் வெட்டில் இருந்து தமிழகம் மீளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்