இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வழக்கறிஞர்கள் போராட்டம் - காங்கிரசும் ஆதரவு!

E-mail அச்செடுக்க
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக ஆக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு இதனைக் கூறினார்.

இந்திக்கு ஒரு நீதி. தமிழுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: tamilan, June 19, 2010
நீங்க தமிழையும் வளர்க்க போறதில்ல. தமிழ் நாட்டையும் முன்னேற்ற போறதில்ல.. எல்லாம் அரசியல்.. இதை புரிந்துகொள்ளுமா இந்த அறியாமை தமிழ் சமுதாயம்.. வாழ்க தமிழ்.. வளர்க அரசியல்வாதிகள்..

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்