இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

41 வயதான மனீஷா கொய்ராலாவுக்கு 34 வயதுள்ள தஹாலுடன் திருமணம்

E-mail அச்செடுக்க
காத்மண்டு : 41 வயதாகும் இந்தி திரையுலக பிரபல கதாநாயகிகளில் ஒருவரான மனீஷா கொய்ராலா தன்னை விட 7 வருடம் இளையவரான தஹாலை காத்மண்டுக்கு 10 கீமி தொலைவில் உள்ள கோகர்னா ரிஸார்டில் திருமணம் செய்து கொண்டார்.

நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணத்தில் மனீஷா கொய்ராலாவின் பெற்றோர் பிரகாஷ் கொய்ராலா மற்றும் அவர் தாயார் சுஷ்மா மணமக்களை ஆசிர்வதித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் திருமண சடங்கில் நாளை பெண் மனமகன் வீட்டிற்கு செல்லும் முக்கிய வைபவம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள விருந்தில் நேபாள நாட்டு ஜனாதிபதி ராம் பரான் யாதவ், பிரதமர் மாதவ் குமார், மாவேயிஸ்டு தலைவர் பிரசாந்தா மற்றும் முன்னாள் மன்னர் ஞானேந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தன்னுடைய குடும்ப தொழிலான ஷீ தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் மனமகன் தஹால் ஒரு வருடத்திற்கு முன் பேஸ்புக்கில் தற்செயலாக மனீஷாவுடன் ஏற்பட்ட நட்பே திருமணம் வரை வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தன் கலைச்சேவை தொடரும் என மனீஷா அறிவித்துள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்