கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் இரண்டு பெண்களும் இரு குழந்தைகளும் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் ஏழு மற்றும் எட்டு வயதுள்ள இரு பெண் குழந்தைகளும் உட்படுவர்.
14 வயதுடைய ஆண் குழந்தையொன்று மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தாலிபான் போராளிகள் மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எதிர்பாராத விதமாக அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தலைவர் அப்துல் ஹக்கீம் இஸ்ஹாக்கி கூறினார். இத்தாக்குதலில் 38 தாலிபான்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அப்பாவிகள் கொல்லப்பட்டதைக் குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகமும் நேட்டோவும் விசாரணை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




