அகொல்கத்தாவில் இருந்து வெளியாகும் ஒரு பெங்காலி மொழி பத்திரிகையில் நேற்று ஒரு முழு பக்க செருப்பு விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில் மத்திய ரெயில்வே அமைச்சர் "மம்தா பானர்ஜி" நடந்து வருவது போன்றும், அவரது காலில் அந்த விளம்பரத்தின் செருப்பு உள்ளது போன்றும் இருந்தது.
மம்தா பானர்ஜி அணிந்திருந்த அந்த விளம்பர செருப்பு மிகவும் உறுதியானது, நீடித்து உழைக்ககூடியது என்னும் விளம்பர வாசகம் எழுதப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்வுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படி அற்ப்ப லாபத்திற்க்காக விளம்பரத்தில் ஈடுபடுவது கண்டிக்கதக்க ஒன்று என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பிரதமர் மன்மோகன்சிங் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரதமர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளனர்.
மம்தா பானர்ஜி இந்த விளம்பரம் குறித்து கூறுகையில் தனது அனுமதி பெறாமல் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரிக்க ரெயில்வே அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட செருப்பு நிறுவனத்தின் மீது நடந்த விசாரனையில் அந்த நிருவனம் தன்னிச்சையாக அந்த விளம்பரத்தை வெளியிட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த நிறுவனம் மீது டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




