மும்பை : மணிரத்னம் இயக்கிய ராவண் படம் தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அப்படம் நன்றாக உள்ளது என்றும் தோல்வி படம் என்று இரு வேறு கருத்துக்கள் உலவுகின்றன. இச்சூழலில் கரண் ஜோஹரை கிண்டல் செய்யும் முகமாக ராம் கோபால் வர்மா ராவண் படத்தை மை நேம் இஸ் ராவண் என்று ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அது போல் மணிரத்னம் தன்னுடைய தோல்வி படமான ஆக்கை ரீமேக் செய்ய வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியுள்ளனர்.
சமீப காலமாக ட்விட்டரில் இந்தி திரையுலக பிரபலங்கள் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. ராம் கோபால் வர்மாவுக்கும் கரண் ஜோஹருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஷாரூக்கானின் நெருங்கிய நண்பரான கரண் ஜோஹர் ஷாரூக்கானை கதாநாயகனாக வைத்து மிக பிரமாண்ட எதிர்ப்பார்ர்புடன் எடுத்த மை நேம் இஸ் கான் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதை தான் மேலே கண்டவாறு ராம் கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார்.
இன்னும் நல்ல யோசனை என்னவென்றால் நான் மை நேம் இஸ் ராவண் என்றும் மணிரதனம் ராவன் கி குர்பான் என்றும் படமெடுத்தால் நன்றாக இருக்கும். கரண் ஜோஹரின் சமீபத்திய படங்கள் குர்பான் மற்றும் மை நேம் இஸ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் கரன் ஜோஹரும் தன் ட்விட்டரில் வர்மாவுக்கு சிறந்த நகைச்சுவை உணர்வு உண்டென்றும் தன் படத்தில் தான அதை வெளிப்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
மேலும் ராம் கோபால் வர்மா தன் தோல்வி படமான ஆக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது உண்மையில் அது ஷோலேவை விட மிகப் பெரும் வெற்றி படம் . ஏனென்றால் யாருடைய படம் தோல்வி அடைந்தாலும் அதை ஆக்கோடு தான் ஒப்பிடுகிறார்கள். தாஷன் மற்றூம் சாந்தினி சவுக் தோல்வி அடைந்த போது அதை ஆதிதயா மற்றும் அக்சயின் ஆக்கென்றே வர்ணிக்கின்றனர் தற்போது ராவணை மணியின் ஆக் என்று கூறுவது போல்.
எப்படியோ வெற்றி படங்களுக்கு பென்ச் மார்க் வைக்கிறேனோ இல்லையோ தோல்வி படங்களை எடை போடவாவது என் படம் உதவுகிறதே அதுவே எனக்கு திருபதி என்றார். ராம் கோபால் வர்மா தான் பார்த்ததிலேயே சகிக்க முடியாத படம் கரண் ஜோஹரின் கபி அல்விடா நா கஹ்னா என்று முன்னர் கூறியதிலிருந்தே இருவருக்குமிடையான உறவு மோசமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




