இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செம்மொழி மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது கலாம் எங்கு இருந்தார்?

E-mail அச்செடுக்க
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு துவக்க விழாவுக்கு இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான அப்துல் கலாமை அழைக்காதது நடுநிலையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இருப்பினும் தமிழினத்தின் மிக மூத்த தலைவர் எடுக்கும் விழா என்பதால் தங்கள் அதிருப்தியை மூட்டை கட்டி வைத்து விட்டு செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்து வருகின்றனர்.

தங்கள் அதிருப்தியை தற்போது வெளிப்படுத்துவது நாகரீகமில்லை. மாநாடு முடிந்தபிறகு தங்கள்  குமுறலை வெளிப்படுத்தலாம் என  சிலர் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் செம்மொழி மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள்  கோலாகலமாக  நடைபெற்றன.

அப்போது கலாம் எங்கிருந்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆமாம். கலாம் எங்கு தான் இருந்தார்?

அப்போது கலாம் மும்பையில் இருந்தார். புகழ் பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர் கே  லட்சுமணன்  உடல் நலக்குறைவாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக கலாம் மும்பை சென்றிருந்தார்.

இதனை பார்க்கும்போது எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க மற்றொரு காட்சி என் நினைவுக்கு வருகிறது.

இந்தியா விடுதலை பெற்று நாடே கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருக்கிறது.  அப்போது விடுதலை போராட்ட களத்தின் தலைமை தளபதி யான காந்தியார் எங்கிருந்தார் தெரியுமா  மேற்கு வங்காளத்தில்  சவரி சவரா என்ற இடத்தில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் . ஒவ்வொரு சான்றோரின் வாழ்க்கையிலும் இத்தகைகைய சம்பவங்களே விரவிக்கிடக்கும்போலும்.
கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: ibrahim, July 01, 2010
it is the example of karunathi, he is a worst public thinker.he make good family politics. y he never give responce to mr kalam. kalam is a good human manner, former president of democority of india,scientist, tamizan, role model of student.i ask to mr m.karunathi? the above chracter not enough for call kalam .
. people now a days understand ur original face. he is make everthing for him .SELFISH
0
...
எழுதியவர்: raja prabhu, August 30, 2010
Dr,kalam sir is one of tamilan,and one of indian,kalam sir is not come in tamil manadu but he will come our heart........now c.m,is no about anythink,he only know about his family members only,he is one of SELFISH,in few days people are give equal druble to him.....dr,kalam sir always ours guru.....JAIHIND,VANDAMARATHAM.......///////////////////////// BY ONE OF KALAM SIR FAN......JAIHIND/////////
0
...
எழுதியவர்: N.A.M. SADIQ, December 30, 2010
குடும்ப அரசியல் தலைவர் கருனானிதி இதர்கும் ஏதாவது ஒரு பதில் வைத்திருப்பார்.
குறிப்பு: கலாம் அவர்கள் இஸ்லமியராக இருந்தாலும் இஸ்லாமிய நிகழ்சிகளுக்கு அழைக்க பட்டால் அதை லாவகமாக தவிர்த்து விடுவார் அதே சமயம் காமகோடியை போஇ சந்திப்பார் அதனால்தான் காவிகளின் ஆதரவு இந்த முஸ்லிமுக்கு மட்டும் இருக்கு. (முஹம்மது ஸாதிக் அத்திகக்டை)

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்