இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

குஷ்பூ - இலையை விட்டு வந்த பூ : வாலி!

E-mail அச்செடுக்க
நடிகை குஷ்பூ திமுகவில் இணைந்ததை "இலையை விட்டு வந்த பூ" என்று கவிஞர் வாலி வர்ணித்தார். தவிர, முத்துசாமியும், சின்னசாமியும் திமுகவில் இணைந்ததையும் தனது கவிதையில் சுட்டிக் காட்டினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் வாலி இதற்குத் தலைமையேற்று நடத்தினார். தன்னுடைய தலைமைக் கவிதையில், ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த குஷ்பூ திமுகவில் இணைந்ததை "இலையை விட்டு வந்த பூ" என்று வர்ணித்தார்.

அதுபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் சின்னசாமி ஆகியோர் திமுகவில் இணைந்ததை, "ஆலயம்தானே சாமிகளுக்கு இடம். அதனாலேயே சாமிகள் அறிவாலயம் நோக்கி வருகின்றனர்" என்று குறிப்பிட்டார். அவரது கவிதை வரிகள் வருமாறு:

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்

மூப்பெய்த முதல் தமிழே, போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !

எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!

தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !

கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட

அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,

பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,

அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்

செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !

காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !

செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !

பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று
இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது

ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு
உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது

அப்பூ... எப்பூ?
புடவை கட்டிய பூ

ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !
கருத்துக்கள் (6)Add Comment
0
...
எழுதியவர்: sridharank, June 28, 2010
Atchiyalargalukku val pidippathal vali ena aahu peyar kondaro ivar
0
...
எழுதியவர்: Selva, June 29, 2010
வாலி நீ ஒரு போலி
நீ ஞானி போர்வையில் இருக்கும் அஞ்ஞானி
குஷ்பூக்கு கொடி பிடிக்கும் நீ ஒரு டூப்பு
0
...
எழுதியவர்: kp, June 29, 2010
vali sir excellant poem valga kalignar valka tamil
0
...
எழுதியவர்: mohamed ali jinnah, July 03, 2010
குஷ்ப்பூ ஒரு வாடிய பூ அதனால் ஒதுக்கி விடுங்கள் .
0
...
எழுதியவர்: sarthar, July 03, 2010
kuspu ne oru dupu ,vali ne oru somali vayasana komali unaku la anda kamali
ne jaldra thatra pemali
0
...
எழுதியவர்: viswam, July 03, 2010
dai vali eduku nee enda tamil kathukina poi ........

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்