இந்தியா கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கனடத் தலைநகர் டொரண்டோவில் கையெழுத்தானது.இந்தியப் பிரதமராக ஐ.கே. குஜ்ரால் பதவி வகித்தபோது அவர் கனடா சென்றதுதான் இந்தியப் பிரதமர் ஒருவரின் கடைசி கனடப் பயணமாக அமைந்திருந்து. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கனடா சென்றுள்ளார்.
இதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் முன்னிலையில் இந்திய அணுசக்தித் துறைச் செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் கனடிய வெளிநாட்டு அமைச்சர் லாரன்ஸ் ஆகியோர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கனடாவிலிருந்து அணு சக்தி தொழில் நுட்பம் மற்றும் யுரேனிய இறக்குமதியை இந்தியா செய்யமுடியும்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இரு நாட்டு உறவில் இது புத்திய அத்தியாத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார். இந்தியாவின் அணு சக்தி தளங்கள் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் உள்ளிட்ட எவரும் நெருங்க முடியாதவாறு அவை அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




