இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (29-06-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

நித்தியானந்தா ஜாமீனில் வெளியே வந்து விட்டார். வங்கி கணக்கு முடக்கம் ரத்து செய்யப் பட்டு விட்டது. இவரும் இனி எளிதாக வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டு விடுவார் தானே? - வேதா ராமன்

அப்படிச் சட்டென விரைந்து முடிவுக்கு வரமுடியாது.

வழக்கின் வடிவமைப்பு, அது பதியப்பட்ட சட்டப்பிரிவுகள், நித்திக்கு எதிரான ஆவணங்கள், சான்றுகள், அரசு வழக்கறிஞர்களின் வாதங்கள், எதிரணியின் மறுப்புரை,வழக்கை இரு பக்கமும் இழுத்தடித்தல், நீதிபதி தெளிவடைதல் போன்ற பல கூறுகள் உள்ளதால் உடனடியாக நாம் எவ்வித விடையும் அளிக்க முடியாது.



மோடி கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பிய நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை விட்டு வெளிவர மறுப்பது ஏன்? மக்கள் ஏமாளிகள் என்பதாலா? - அப்துல் கரீம்

மோடி தம் கைக்காசையோ கட்சி நிதியையோ வழங்கவில்லை; அப்பணம் குஜராத் மக்களின் வரிப்பணம். அதை நிதிஷ்குமார் திருப்பி அனுப்பியது பக்குவமற்ற செயல்.

அதுபோல் மோடியும் பீஹார் மக்களின் துயருக்கு உதவியதைத் தாம் அளித்த கொடைபோல விளம்பரம் செய்தது அதைவிடப் பக்குவமற்ற செயல்.

அதற்காக பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியே வருவது என்பது இரு கட்சிகளுக்குமே தற்கொலை முயற்சியாகும்.


எம்.ஜி.ஆரை விட சிவாஜி சிறந்த நடிகராக இருந்தும் ”நடிக்கத் தெரிந்த ” அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே. ஏன்? - ராஜேந்திரன்

சிவாஜி கணேசனைத் திரைப்படத்தில் நடிகராக ஏற்றுக் கொண்ட மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாஜி "நடிகர் திலகம்"; ஆனால் எம்ஜியார் "மக்கள் திலகம்". இதனால்தான் எம்ஜியார் தமிழ்நாட்டை ஆள முடிந்தது. சிவாஜியால் ஒரு கட்சியைக் கூட முழுதாக நடத்த முடியவில்லை.


அதிமுகவில் இருந்து அணிமாறி வரும் அனைவருக்கும் திமுகவில் சீட்டு கொடுத்தால் திமுகவில் இருப்பவர்கள் கதி என்னவாகும்? - லதா

அ.தி.மு.க.விலிருந்து வரும் அனைவருக்கும் பதவிகள் வழங்க கருணாநிதி ஒன்றும் வள்ளல் இல்லை. அரசியலில் ஆழம் கண்டவர் அவர். குறியெதிர்ப்பை நீரதுடைத்து எனும் உண்மைதான் இது.

எந்தெந்தப் பகுதிகளில் தம் கட்சிக்கு வலுவில்லையோ, அப்பகுதியில் தொண்டர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கத் தெரிந்த, செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவர்களைத் தம் கட்சிக்குள் இழுத்து அவர்களுக்குப் பதவிகள் தருவார். அது அத்தலைவர்களுக்கும் அவர்களுடன் இணைந்து இங்கே வந்த அவர்களது தொண்டர்களுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கும். புதிதாய் மதம் மாறியவர்களைப்போல் புதிதாய்க் கட்சி மாறியவர்களும் தம் கொள்கையில் தீவிரமாய் இருப்பர்.

இப்படி அணிமாறி வருபவர்களுக்குப் பதவிகள் வழங்கினால் இங்கே இருப்பவர்கள் தலைமையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்குக் கட்சிப் பதவிகள் பங்கிடப்படும்.


மு.க அழகிரி தமிழக அரசியலுக்கு வந்தால் அவருக்கு பொருத்தமான பதவி எது? - நாராயணன்

அவருக்கு எந்தப் பதவி பொருத்தமாக இருக்கும் என்பதை அக்கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அவர் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் நடுவண் அரசில் அமைச்சராகவும் உள்ளாரே? அவர் இப்போதும் தமிழகத்தில்தானே அரசியல் செய்கிறார். டெல்லிக்குப் போவது கூட வெகு அரிதான செயலன்றோ?


தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி ஏற்பட்டால் மதிமுக நிலைமை என்னவாகும்? - நளினி

இப்போதும் அக்கூட்டணியில் ம.தி.மு.க வலுவான பங்காளி இல்லை. தே.மு.தி.க அக்கூட்டணியில் சேர்ந்தாலும் ம.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா இப்போதுள் ளதைவிடச் சிறப்பிடம் கொடுத்துவிடப் போவதில்லை.

குட்டி குட்டி நாடுகளெல்லாம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிரட்டும்போது கோடிக்கணக்கான மக்களை வைத்துக் கொண்டு நம்மால் ஏன் முடியவில்லை? - ரஹ்மத்துல்லாஹ்

நம்மை விடக் கோடிகளில் அதிகமான மக்களைக் கொண்ட சீனாவும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இடம்பெறவில்லை.

சீனா கிரிக்கெட்டில் ஏன் மிரட்ட முடியவில்லை?

அரபிகளின் / அரபு நாடுகளின் வெறிபிடித்த விளையாட்டு கால்பந்து. அவர்களும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லையே ஏன்?

அப்போட்டிக்கான தகுதி நம்மிடம் இல்லை. கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முதலிடம் தேசீய விளையாட்டான ஹாக்கிக்குகூட நாம் கொடுப்பதில்லை. இதுவே காரண்.


இந்தியாவின் அமைதியைக் குலைப்பதில் பாகிஸ்தானுக்கு அப்படி என்ன ஒரு அற்ப சந்தோஷம்? - தாஜ்

எதிரியை எப்போதும் பதற்றத்தில் வைப்பது அரசியல் ராஜதந்திரங்களுள் ஒன்று. பாகிஸ்தான் மட்டுமின்றி வல்லரசு நாடுகளும் இதைச் செய்து கொண்டே இருக்கின்றன. என்ன ஒன்று, நம்மை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் பாகிஸ்தானில் ராஜதந்திர முடிவுகளை விட அந்நாட்டின் ராணுவமும் உளவுப்பிரிவும் (ISI) அதன் கைப்பாவையான தீவிரவாதிகளும் எடுக்கும் முடிவுகளே செயல்படுத்தப் படுகின்றன. அதனால் இந்தியாவின் மீது அடிக்கடித் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

பாகிஸ்தானில் சிந்து பகுதியிலும் பலுஸிஸ்தானத்திலும் உருவான கலவரங்களுக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமும் ஆயுதமும் வழங்கியது இந்தியாவும் ராவும் (R A W ) என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வந்துள்ளதைப்போன்றே இந்தியாவின் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீதித்துறையினால் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என மும்பை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதியே கூறியிருக்கிறாரே. - பாலு

போபால் யூனியன் கார்பைடு ஆலை வழக்கின் தீர்ப்பு அண்மைச் சான்று.

பாபர் மசூதி வழக்கு இன்னும் முடிவடையவே இல்லை

அரிதினும் அரிதாய்ச் சிலருக்கு நீதி கிடைக்கிறது.

நம் நாட்டு நீதிமன்றங்கள் வழக்குகள் பதியப்பட்ட சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலும் வழக்கறிஞர்களின் வாதங்களின் அடிப்படையிலுமே தீர்ப்பு வழங்குகின்றன. வழங்கப்படும் தீர்ப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீதி வழங்கப்பட்டதாகக் கொள்ள முடியாது. இதையே அந்த நீதிபதி சுட்டிக்காட்டியிருப்பார் என நினைக்கிறேன்.


பாம்பு புற்றில்தான் இருக்கும். பின்பு ஏன் எந்த புற்றில் எந்த பாம்போ என சொல்கிறார்கள்? - அன்வர்

மனிதர்கள் வீடுகளில் வசித்தாலும் வெளியார் எல்லோருக்கும் எந்த வீட்டில் எந்த மனிதர் வசிக்கின்றனர் என்று தெரிவதில்லை. அதனால்தான் வீட்டு எண் / முகவரி கேட்கிறோம்.

அதுபோலவே பல புற்றுகள் இருந்தாலும் சில வெறுமையாக இருக்கும்; சில பாம்புகளுடன் இருக்கும்.

பாம்புப் புற்றுகளுக்கு எண்ணோ பாம்புகளுக்கு முகவரியோ இல்லாததால்தான் எந்தப் புற்றில் எந்தப் பாம்போ ...............



கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: க.ராதா, July 12, 2010
தமிழில் படித்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் அரசாங்கம் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு
பணியில் அமர்த்த தயக்கமும் தடையும் காட்டுவது ஏன்? மேலும் தமி்ழ் துறை ஆசிரியர்களை நீண்ட ஆண்டுகளாக
நியமிக்காததன் காரணம்தான் என்ன?
0
...
எழுதியவர்: mohamed ali, July 18, 2010
வணங்காமுடி பதில்கள்
தொடர்ந்து வரவில்லை . நல்ல பதிப்பு தொடரட்டும்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்