இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் அமிதாப்!

E-mail அச்செடுக்க
புகழ்பெற்ற கோன் பனேகா க்ரோர்பதி என்ற தொலைக்காட்சி விளையாட்டு ஷோவை பிரபல இந்திய நடிகர் அமிதாப் பாச்சனே மீண்டும் வழங்க உள்ளார்.

2000ஆம் ஆண்டு ஸ்டார் டிவியில் சக்கை போடு போட்ட கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி மீண்டும் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாக விருக்கிறது. 2006ஆம் ஆண்டுடன் அந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இடைக்காலத்தில் இந்த நிகழ்ச்சியை இந்திப் பட நடிகர் ஷாருக் கான் தொகுத்து வழங்கினார்.

தற்போது கேபிசி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சி சோனி டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. 67 வயதாகும் அமிதாப் என்ற முதிர்ந்த சிங்கம் நிகழ்ச்சியை நடத்தப்போகிறது. கம்ப்யூட்டர் ஜி, லாக் கி யோ ஜி போன்ற வார்த்தைகள் இனி ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமிடும் என எதிர்பார்க்கலாம்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்