இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

11 ஆண்டுகள் பிணத்துடன் வாழ்ந்த 91 வயது பெண்!

E-mail அச்செடுக்க

அமெரிக்காவைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் தனது கனவரின் பிணத்துடன் 11 ஆண்டுகளும், சகோதரின் பிணத்துடன் 1 ஆண்டுகளும் வாழ்ந்துள்ளார்.

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் வேயலுசிங் என்ற கிராமத்தை சேர்ந்தவர் "ஜீன் ஸ்டீவன்ஸ்"(91) இவரது கணவர் பெயர் "ஜேம்ஸ்", சகோதரியின் பெயர் "ஜூன்".

தன் கணவர், மற்றும் சகோதரி ஜூன் ஆகிய இருவரின் மீதும் ஜீன் ஸ்டீவனுக்கு அளவுகடந்த பாசம். ஜேம்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர், 1999ம் ஆண்டு மே 21ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் புதைத்து விட்டு சென்றதும், ரகசியமாக அதை தோண்டியெடுத்து வீட்டுக்கு தூக்கி வந்துள்ளார் மனைவி ஜீன்.

பின்னர் பிணம் கெடாமல் இருக்க பல ரசாயனங்களை தடவி 11 ஆண்டுகளாக பாதுகாத்து அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அன்பு சகோதரி ஜுனும் கடந்த ஆண்டில் இறந்தார். முன்புச் செய்ததை போலவே பிணத்தை உறவினர்கள் புதைத்த பின்னர் யாருக்கும் தெரியாமல் சகோதரியின் பிணத்தை வீட்டுக்கு கொண்டு வந்தார். ரசாயன திரவங்களை பயன்படுத்தி பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரிய போலீஸ் ஜீனிடம் விசாரணை நடத்தியது அப்பொழுது ஜீன் போலிஸிடம் கூறுகையில், "என் கணவர், சகோதரியின் இறப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உடலை அழித்து விட்டால் நினைவுகள் அழிந்து விடும். ஆனால், இப்போது பாருங்கள். கணவர், சகோதரியை தினமும் பார்க்கிறேன். அவர்களுடன் பேசுகிறேன். கொஞ்சி மகிழ்கிறேன்’’ என்கிறார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்: "ஜீனிடமிருந்து பிணங்களை பிரித்து வைத்துள்ளோம். அவர் மீது வழக்கு எதுவும் தொடரவில்லை" என்றார்.

ஜீன் மற்றும் அவரது சகோதரி ஜூன் ஆகிய இருவரும் இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்