இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வணங்காமுடி பதில்கள் (18-07-2010)

E-mail அச்செடுக்க

 

 

 

பல நல்ல செயல்கள் செய்தாலும் கருணாநிதியின் குறைகளை மட்டும் தங்களை போன்றவர்கள் விமர்சிப்பது ஏன்? நக்கீரனின் வழி வந்தவர்களோ? - பாலன்

உங்கள் வினாவில் பாதி விடை உள்ளதே!

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்றவன் நக்கீரன்.

யாரையும் பொருளற்று விமர்சிப்பதோ குறை கூறுவதோ நமக்குத் தேவையில்லை.நல்லது செய்யும்போது பாராட்டுவதும் குற்றம் கண்டால் சுட்டிக்காட்டுவதும் குட்டிச் சொல்வதும் ஊடக உரிமை.

வாசகர் தொடுக்கும் வினாக்களுக்கே வணங்காமுடியால் விடைகள் தரப்படுகின்றன. கருணாநிதியின் நல்ல செயல்களைப் பாராட்டும் படியான வினாக்களை எழுப்புங்களேன். கருணாநிதி உருவாக்கிய, ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தங்கி ஒரு லட்சம் ரூபாய் வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்த “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைம்” பற்றி, '108' எண்ணில் தொலைபேசிச் செய்தியில் வீட்டுகே ஆம்புலன்ஸ் வருவது போல நல்ல செயல்களைப் பற்றி வினா எழுப்புவதில்லை யாரும்.

இதற்கு முன்பும் பல வினாக்களில் கருணாநிதிக்கும் தி.மு.க.விற்கும் ஆதரவாக விடை தரப்பட்டுள்ளதை நீங்கள் எம் தளத்தில் படிக்கலாம்.



தமிழ் வேறு திராவிடம் வேறு என்று கூறுகிறார்களே...எப்படி? - நரசிம்மன்

தமிழும் அதிலிருந்து பிறந்த நான்கு மொழிகளும் திராவிட மொழிக் குடும்பம் என்பர் மொழியியலார். அதிலிருந்து திராவிட இனம் என்றும் திராவிட நாகரிகம் என்றும் கருத்துகள் உருவாயின.

திராவிடம் என்பது ஒரு கருதுகோள். (hypothesis) அறிவியல் முறையில் ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்தும் உண்டு.

சிலர் தமிழும் தமிழினமும் தனித்தன்மை வாய்ந்தவை; தமிழ் வேறு திராவிடம் வேறு என்பர்.

தமிழ்த் தேசீயம் பேசும் பலரும் வீட்டில் வேறுமொழி பேசுவோரே!


நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தனது வாதங்களை எடுத்து வைக்க முடியுமா? - சுபைர்

முடியும். ஜனதாக் கட்சித் தலைவர் ஸுப்ரஹ்மண்யம்ஸாமி பல வழக்குகளில் தமக்காகத் தாமே வாதாடியதை நீங்கள் அறிந்ததில்லையா?

குற்றச்சாட்டு, வழக்கின் தன்மை, சட்டப்பிரிவுகள் போன்றவற்றை நன்கு அறிந்து, குழப்பமின்றி எடுத்துரைக்கத் திறமையும் எதிர் வழக்கறிஞருடன் வாதத்தில் ஈடுபட வாக்கு வன்மையும் இருந்தால் நீங்களும் வாதிடலாம்.


"தமிழ் வழிக் கல்வி" என்ற பெயரால் அரசியல் நடத்தி வரும் ஊழல் தலைவர்கள், தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கிலம், இந்தி படிக்க வைக்கிறார்கள். ஆனால் தமிழ் படிக்கும் மாணவனோ, உயர் கல்விகளில் ஆங்கில வழியில் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் நன்றாகப் படிக்க முடியாமல் திணறுகிறார்கள். சில மாணர்கள் விரக்தீயல் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவனுக்கும் ஆரம்பக் கல்வியில் இருந்து "ஸ்போக்கன் இங்கலீஷ்" கற்றுத் தரலாமே! இதற்கு வணங்காமுடியாரின் பதில் என்ன? - வி.குமார்

தரலாமே?

அதற்கு ஆங்கில எழுத்துகள் படிப்பிக்கப்பட வேண்டும்; எழுத்து, சொல், சொற்றொடர் என ஒவ்வொன்றாய்க் கற்பித்தால்தான் வேற்று மொழியான ஆங்கில மொழியைப் பேச்சுமொழியாகப் புரிந்துகொள்ள இயலும்.

ஆரம்பக் கல்வியில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.ஆனால் உயர் கல்வி வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடத்தைப் புரிந்து கொள்ள ஸ்போகன் இங்லிஷ் மட்டும் உதவாது.

ஆங்கிலம் கற்பது தொடர்பாக முன்பு வணங்காமுடி விடைப்பகுதியில் சொல்லப்பட்டதையும் காண்க!


ததஜவின் ஜூலை 4 மாநாடு பற்றி...? - கலீல்

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஸச்சார் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வேறு சில முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்கள் நடத்தியபோதும் தமிழ்நாட்டில் ததஜவினரால் நடத்தப்பட்ட மாநாட்டில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதும் ததஜவின் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்ததும் அந்தக் கோரிக்கை அரசின் செவியில் வலிமையாக விழுந்துவிட்டது என்ற நம்பிக்கையை ததஜவினருக்கு எற்படுத்தியுள்ளது. அதுவே மாநாட்டின் வெற்றி எனவும் கொள்ளலாம்.


பக்கத்து வீட்டு ஆன்டியின் கல்யாணத்துக்குப் போனோமே. அப்போது அவர்களிடம் பாப்பா இல்லை. இப்போது திடீரென அவர்களுக்குப் பாப்பா வந்தது எப்படி என என் மகள் கேட்கிறாள்.எப்படி விளக்குவது? - நூர்

இவ்வுலகின் மகிழ்ச்சிக்காய்க் கடவுள் தரும் பரிசே உன்னைப்போலச் சின்னப் பாப்பாக்கள் தாம். கல்யாணம் செய்தவர்களுக்குக் கடவுள் அப்பரிசைத் தருவாராம். அதனால் பாப்பாக்களைப் பரிசாய் இவ்வுகலகிற்குப் பெற்றுத் தர ஆன்டியும் அங்கிளும் கலயாணம் செய்து கொண்டார்களாம்.... உன்னைப் பெற உன் அம்மாவும் நானும் கல்யாணம் செய்து கொண்டதைப்போல.... என்று சொல்லிப்பாருங்களேன்.



கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும்.
கருத்துக்கள் (9)Add Comment
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
உங்கள் இணையதளம் நடுநிலையோடு செயல்படவில்லை
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
அப்படி என்ன நடுநிலை தேவை?
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010

சொல்றதை தெளிவா சொல்லு சாமீய்.......
பாட்டு இல்லேங்கறியா? டான்ஸூ இல்லேங்கறியா?
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
இதைவிட என்னடா தெளிவா சொல்லணும்?
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
கோவிச்சுக்காதே சாமீய்....எதுல நடுநிலை இல்லேங்கிறே?
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
அப்படி என்ன நடுநிலை வேண்டும் என்று சொல்லுங்க ராசா!
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
ஆரம்பிச்சுட்டான்யா......ஆரம்பிச்சுட்டான்.....!!
ஜோதி
...
எழுதியவர்: ஜோதி, July 20, 2010
டுபுக்கு ரோமியோ வந்துட்டான்யா...
0
...
எழுதியவர்: நண்பன், July 21, 2010
அபுநூறாவை ஐநா-வுக்கு அனுப்புனாத்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்!

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்